Monday, April 13, 2009

OPEN DAY- AFTER 6 P.M


Share/Bookmark


குறிப்பு: இந்த பதிப்பு இதற்கு முந்தய பதிப்பின் தொடர்ச்சியே.

மணி 5.30 தொட்டது. SYMPOSIUM நிறைவு பகுதியில் இருந்தது.
இருபுறமும் இரண்டு இறுதியாண்டு மாணவர்கள் நடுவில் நான் ஒரு பனைய கைதி போல. காலையில் எனக்குள் இருந்த அந்த தைரியம் இப்போது குறைந்து, "அய்யய்யோ! இன்னிக்கு என்னல்லாம் பண்ண போரனுன்களோ" என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சீட்டிலிருந்து எழ முயன்றேன். உடனே அருகில் இருந்தவன் "எங்க சார்போறீங்க?" என்றான்.
"
பிஸ் அடிச்சிட்டு வந்துடுறேண்ணே!!" என்றேன்.

"
அட 6 மணிக்கு மேல அது தானா வந்துடும் சார் . நீங்க உக்காருங்க" என்றான்.

இல்லண்ணே! ரொம்ப அவசரம் னே! போயிட்டு இப்ப வந்துடுறேன் "

"
மவனே! போயிட்டு 5 நிமிஷத்துல வரணும். இல்ல சாவடிச்சுடுவேன்" என்றான் இன்னொருவன்.

"
அண்ணே ! மனுஷன நம்புங்கன்னே! நம்பிக்கைதான் வாழ்க்கை! எப்புடி திரும்பி வர்றேன்னு மட்டும் பாருங்கண்ணே !" என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன். உடனே எங்கள் பள்ளியில் நான் ஓட்டபந்தயத்தில் இரண்டாவதாக வந்தது ஞாபகம் வந்தது. விடு ஜூட். அங்க பிடித்த ஓட்டம் ஹாஸ்டல் உள்ளே சென்றவுடன் தான் நின்றது.

அப்பாடா ..... எஸ் ஆய்ட்டோம். 7 மணி வரைக்கும் எவன் கண்ணுலையும்படக்கூடாதுடா சாமி என்று நினைத்துக்கொண்டே என் நண்பனின் அறையை நோக்கி சென்றேன். அது கடைசி அறை. அங்கே சென்றால்தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணி சென்றுகொண்டிருந்தேன். வழியில் ஒருவன் நின்றிருந்தான்.

"
மச்சி யார் வந்து என்ன பத்தி கேட்டலும், என்ன பாத்தே நாலு நாள் ஆயிடுச்சின்னு சொல்லிடு. இங்க இருக்கேன்னு மட்டும் சொல்லிடாத" என்றேன். "சரிடா".... என்று அவன் தலையை ஆட்டியதும், நானும் நம்பி அந்த ரூமுக்கு போனேன்.

அந்த அறையில் யாரும் இல்லை. மின் விளக்குகளை அனைத்து விட்டு கதவை உள் பக்கமாக தாழிட்டு விட்டு ஜன்னல் ஓரமாக இருந்த மூலையில் சென்று அமர்ந்துகொண்டேன். ஒரு இருபத்து நிமிடங்கள் சென்றன.... வெளியில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம். இது எங்கயோ கேட்ட குரல். "ஆஹா இது அவன் இல்ல"....காலையில் என்னிடம் அடிபட்ட அப்பாவி என்னை பற்றி யாரிடமோ விசாரித்துக்கொண்டிருந்தன்.

சிறிது நேரத்தில் நான் இருந்த அறையில் கதவு தட்டப்படும் சத்தம். "சார்! நீங்க உள்ள தான் இருக்கிங்கன்னு அவன் சொல்லிட்டன். மரியாதையாநீங்களே வந்துடுங்க........ இல்லன்னா " என்றபடி ஜன்னலை திறந்து அவன்கையை உள்ளே விட்டு கதவின் தாழ்ப்பாளை விடுவித்தான். கதவை திறந்து உள்ளே வந்த அவன் சுற்றும் முற்றும் தேடினான்.

"
சார் இங்கதான் இருக்கிங்களா... உங்களைத்தான் தேடிகிட்டிருக்கேன். இந்த மூலையில உக்காந்து என்ன சார் பண்ணுறீங்க?"

"
இல்லண்ணே நீங்க என்ன கண்டுபுடிக்கிரீங்கலான்னு டெஸ்ட் பண்ணேன் . நீங்க கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க" என்றேன். "சரி வா நம்ம ஏரியாவுக்கு போவோம்" என்று என் பின் கழுத்தில் கையை வைத்து தள்ளிக்கொண்டு போனான். வழியில் என்னை காட்டிக்கொடுத்த அந்த துரோகி நின்று கொண்டிருந்தான்.

"
என்ன மச்சி இப்புடி பண்ணிட்ட? " என்றேன். "இல்லடா.... சும்மா ஜாலிக்கு " என்றான்.
"
என்னது ஜாலிக்கா..... இவனுங்க என் சோலிய முடிச்சிடுவானுங்கலேடா.... டேய் எட்டப்பா! உனக்கு அடிக்கிறேண்டா ஒருநாள் பெரிய ஆப்பா! "
என நான் கடுப்பாக அவன் அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டான்.

"
சார் அத அப்புறம் பாத்துக்கலாம்... நீங்க வாங்க... நாம போவோம்" என்றபடி இறுதியாண்டு விடுதியை நோக்கி தள்ளிக்கொண்டு போனான். "டேய் சும்மா வராம எதாவது பாட்டு பாடுடா.... " என்றான்.

"
என்ன பாட்டுண்ணே பாட?" என்றேன்.

"
எதாவது பாடுடா..."

"
வந்தேன்டா பால்காரன்... அடடா...
பசு மாட்ட பத்தி பாட போறேன் " என நான் பாட

"
அடி செருப்பால .....நாயே..... யார பாத்து 'டா' ங்குற .... வந்தேன் சார் னு பாடுடா.... " என்றான்.

"
வந்தேன் சார் பால்காரன் சார் அட சார்
பசு மாட்ட பத்தி பாட போறேங்க சார்
புல்லு குடுத்தா சார் பால் குடுக்கும் சார் உங்களால முடியாது சார் "


"
புல்லு குடுத்தா பால் குடுக்குமா? சரி அந்த புல் ல புடுங்கு " என்றான். கீழே இருந்து கொஞ்சம் புல்லை பிடுங்கினேன் .
"
அந்த மாட்டுக்கு குடுத்து பால கற" என்றான்.

"
அண்ணே! மாடு எங்கண்ணே?"

"
அங்க மாடு இருக்கிறது மாதிரி நெனச்சிகிட்டு கறடா" என வெற்றிடத்தை காண்பித்து சொன்னான்.

நானும் சிறிது நேரம் நானும் மாட்டிற்கு புல் தருவது போல் செய்கை செய்துவிட்டு "அண்ணே இந்த மாடு புல்ல திங்கமாட்டேங்குதுண்ணே " என்றேன்.

டேய்! உன் மூஞ்ச ஏன்டா அதுக்கு பக்கத்துல கொண்டு போற.... அதான் மாடு வெறிக்குது.... ம்ஹூம் ... நீ இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட ..

உனக்காக நெறைய பேர் வெயிட்டிங் ல இருக்காங்க.....வா போலாம்... என
என்று என்னை ஒரு இறுதியாண்டு விடுதி அறைக்குள் அழைத்துசென்றான். கதவு தாழிடப்பட்டது. உள்ளே ஐந்து பேர். அப்போது மணி ஏழு. பத்து மணி வரை அவர்களால் முடிந்த வரை பழி தீர்த்துக்கொண்டனர். அதன் பின்னர் அவர்களில் ஒருவன்

"
டேய் விடுங்கடா பாவம் அவன்" என்றான்.

"
அப்படா.... தெய்வம்ணே நீங்க...."என்று நான் கூறி முடிப்பதற்குள்

"
இன்னிக்கு போதும்... போயிட்டு நாளைக்கு வா..." என்றன்.

"
என்னது நாளைக்குமா?............."

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Anonymous said...

machi.. pattaya kilaputhudaa....

arulhajrams said...

dai dog mudiyala college opendayka pona felling comedy illa unmaiya.. mavana continue pannu kalavaridatha.....madu makira paiyanukku evllo arivanu ninaikurappa parumaya irruku...

arulhajrams said...

Dai dog super da.. college open dayka pona feeing.. nearaya eathir pakkuran continue pannu kala varidatha enna cinna varutham than madu maikura paiyanuku evallo ariva nu….

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...