Monday, May 2, 2011

வாத்தியார் நம்பர்.1: நண்பேன்டா விருதுகள் (ACCET)


Share/Bookmark
வாத்தியார் நம்பர் 1 ன்னோன விஜய் டி.வி ஜோடி நம்பர்.1 program மாதிரி நாலு வாத்தியார கூப்டு வந்து பாடம் நடத்த சொல்லி, சிறந்த வாத்தியார தேர்ந்தெடுக்க சொல்லப் போறேனோன்னு பயப்படாதீங்க. அங்க பாருங்க வாத்தியாருன்னு சொன்னோன ஒருத்தரு தூங்கிட்டாரு.. அண்ணே அண்ணே இது வேறண்ணே. எழுந்திரிங்க.நாங்க காலேஜ்ல படிச்ச நாலு வருஷத்துல நாங்க அதிகமா பேசுன, எங்கள அதிகமா சிரிக்க வச்சி சில professor ருங்கள பத்தினதுதான் இந்த பதிவு.

தங்கள் நடவடிக்கைகளால் எங்க மனதில் நீங்காத இடம் பிடித்த சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு கவுண்டவுன் படி நண்பேன்டா விருதுகள் வழங்கலாம்னு இருக்கேன். ஓவ்வொரு விருது வழங்கும் போதும் தாங்கள் கரகோஷங்களை எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்துமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்... விக்ஸ் வேப்பரப்....

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள செய்திகள் யாவும் உண்மையே. ஆனால் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. இப்போ professor ah இருக்கவங்களும், பெரியவங்களும் தப்பா நினைக்க வேணாம். நீங்க காலேஜ்லயோ ஸ்கூல்லயோ படிக்கும் போது எப்புடி இருந்துருப்பீங்களோ அத நெனச்சிகிட்டு படிங்க.

10.இந்த பத்தாவது இடத்த புடிச்சிருக்கவங்கள பத்தி சொல்லனும்னா, இவங்கதான் எங்க காலேஜின் புன்னகை அரசி. காலங்கத்தால லேபுக்கு போகும் போது இவங்க மூஞ்சிய ஒருதடவ  பாத்துட்டு போனா போதும்.. (த்துபூ)....லேப் ஓகோன்னு வெளங்கிரும்...

இவங்க பேர சொன்னா EEE டிபார்ட்மெண்டே கிடு கிடுன்னு ஆடும். சொல்லலன்னா "கிடுக்"குன்னு ஆடும். அவங்க திட்டுறத கேக்குற எங்களுக்கு காது வலிக்கும்... ஆனா திட்டுற அவங்களுக்கு வாய் வலிக்காது.  யார்னு கண்டுபுடிச்சிருப்பீங்களே... வாயிலயே வயலின் வாசிக்கிற மிஸ் ஜெப சல்மா தான் சிறந்த 10வது நண்பேன்டா...
 
9. ஒன்பதாவது இடத்த புடிச்சிருக்கரத பத்தி சொல்லனும்னா,

அவர்(ள்) நடந்தால் அன்னம் கூட வெக்கப்படும்
பேசும் பாஷையில் ஓராயிரம் நளினம் கூத்தாடும்
வீசும் புயலும் அவரி(ளி)ன் புன்சிரிப்பில் தென்றலாய் மாறிவிடும்

இப்போ நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? இருக்கு... சம்பந்தம் இருக்கு. அவரு(ளு)க்கும் அவரு(ளு)க்குமே சம்பந்தம் இருக்கு. ஏன்னா அவருதான் சம்பந்தம். இவருதான் எங்க Culturals co-ordinator. Culturals la பசங்க பண்ற அளப்பறைய பாத்து இவருக்கு டென்ஷன் தலைக்கேறிடும். இவருக்கு கோவம் வந்தா என்ன ஆகும் தெரியுமா? அழுதுபோடுவாரு அழுது.. இவர தூரத்துலருந்து பாக்கும் போது ஒரு டெரர் பீஸா தெரிஞ்சாலும், actual ah இவரு ஒரு தாவர உண்ணி..

என்னதான் நம்ம பசங்க கிண்டல் பண்ணாலும் வெறுப்பேத்துனாலும், ஒரு ச்செல்ல கோவத்தால நம்ம மனசை அள்ளிகிட்டு போற நம்ம சம்பந்தத்துக்கு சிறந்த 9வது நண்பேன்டா. கவுண்டவுன்ல அவரு பிடிச்சிருக்க இடத்துக்கும் அவருக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. சம்பந்ததுக்கு சம்பந்தமுள்ள இன்னொரு பதிவு பதினாறு பருத்தி வீரர்கள்

8.  இவங்களுக்கு occ graph ah தவற வேற எதுவும் தெரியலன்னாலும் இவங்கதான் எல்லா lab க்கும் incharge. (அய்யோ... வாட்ச்மேன் இல்லங்க.. HOD). இவங்க ஒரு வார்த்தை இங்லீஷ்ல பேச யோசிக்கிற நேரத்துல இன்சாட் IIB ராக்கெட்டயே நம்ம விஞ்ஞானிங்க லாஞ்ச் பன்னிருவாங்க. இப்பவும் நம்ம தமிழ்நாட்டுல நமீதாவுக்கு போட்டியா ஒருத்தரால சேலை கட்ட முடியுமான்னா அது இவங்கள தவிற வேற யாராலயும் முடியாது. சுருக்கமா சொன்னா "அவள் ஒரு டயனோரா கலர் டி.வி". இன்னேரம் நம்ம மக்கள் கண்டுபுடிச்சிருப்பாங்களே..
அவங்களேதான்.... க்ளாமர் உலகத்தில் கொடி கட்டி பறக்கும் "அக்கா மாலா"வுக்கு சிறந்த எட்டாவது  நண்பேன்டா விருது.

7. ஏழாவது இடத்தை தக்கவச்சிருக்கவர பத்தி TR பாஷையில சொல்லனும்னா

இவரு பேரு தாஸு
டப்பா அடிக்கிறதுல இவரு பாஸு
Nagrath Gothari லாம் இவருக்கு தூஸூ
இவரு க்ளாஸ் எடுத்தா நீ ஆயிருவ லூசு

இயாய் டண்டனக்கா...ஏ டனக்குனக்கா..

இவரு intraction class எடுக்க ஆரம்பிச்சாருன்னா "என்னப்பா இவன் வெறி நாய் கடிச்ச மாதிரி பேசுறான்" ன்னு நம்ம எல்லாருக்கும் தோணும். இவர் மீது கொண்ட பற்றினால் மாணவர்கள் இவரை "பாக்ஸ் மண்டையன்" என்று அன்போடு அழைத்தனர்.

இப்ப புரிஞ்சிருக்குமே யாருன்னு. Boxer la வர்ற நம்ம "பூ"ந்தோட்ட காவல்காரன் பாக்ஸ் மண்டையன் தான் 7வது நண்பேண்டா.....இவரோட intraction class ah பத்தி detail ah படிக்க பாக்ஸ் மண்டையனும் பாபா படமும்


6. இவங்கதான் EEE டிபார்ட்மெண்டோட கா(க்கா)தல் தேவதை. காலேஜ்ல லெக்சரர் வேல கெடைக்கனும்னு அரசமரத்து புள்ளையார சுத்தி சுத்தி பழக்கமான இவங்க, வேல கெடைச்சப்புறமும் அந்த பழக்கத்த விட முடியாம, க்ளாஸுக்கு வந்து புள்ளையார் மாதிரி உக்காந்துருக்குற நம்ம பசங்கள சுத்தி சுத்தி பழகிக்குவாங்க...

இளவு காத்த கிளி கதை கேள்வி பட்டுருப்பீங்களே... அதுக்கு இவங்க ஒரு சிறந்த உதாரணம்..  ஆனா க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரு சின்ன ட்விஸ்டு..

ஆத்தா ஆடு வளத்தா... கோழி வளத்தா... ஆனா இவங்க ஒரு மாடு வளத்தாங்க (மாடசாமி).அந்த மாட சாமியா நெனச்சி கும்பிட்டாங்க. காலையும், மாலையும் அதுக்கு டாப் அப் பண்ணி விட்டாங்க. ஆனா ஒரு நாள்  அந்த மாடு EEE டிபார்ட்மெண்ட்லருந்து கயித்த அறுத்துகிட்டு chemistry lab பக்கம் ஓடிருச்சி.. அதுக்கு இவங்க "நீ யாரயோ நெனச்சி வாழா வெட்டியா இருக்க போற.. ஆனா நான் இந்த மாடையே நெனைச்சி வெட்டியா வாழாம இருக்க போறேன்"னு பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசாம அவங்களுக்கு ஏத்த ஒரு அபிஷேக் பச்சன கல்யாணம் பண்ணிகிட்டு அந்த மாட கலாய்ச்சிட்டாங்க.

மாடை கலாய்த்த மாங்குயில், கிராமத்து கருங்குயில் ஆறு (எ) ஆருன்யா ரேவதி சிறந்த 6வது நண்பேண்டா.....

//இந்த பதிவு என் கல்லூரி நண்பர் ஒருவரால் எழுதப்பட்டது. அவருக்கு பப்ளிகுட்டி பிடிக்காது என்ற காரணத்தால் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்..//

 அடுத்த பதிவில் முதல் 5 இடங்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Anonymous said...

Nalla iruku blog but still staffs ah romba ottiteenganu thonuthu:)
willing to know the No 1 staff

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...